Fri, Dec 25, 2015, 22:22 [IST]
சென்னை: திமுக, மக்கள் நல கூட்டணி கூட்டணியைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எங்களுடன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக தவிற பிற கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்காக தயார் ஆகி வருகின்றது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் பிரதான திராவிட கட்சிகள். இதுவரை நடந்த சட்டசபை தேர்தல்களில் இந்த இருகட்சிகளுடன் மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்தும் சில கட்சிகள் தனித்து நின்றும் தேர்தலை சந்தித்தன.

இந்த நிலையில் திமுக,அதிமுக அல்லாத மாற்று ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறி மதிமுக,விடுதலை சிறுத்தைகள்,கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் தேர்தலை சந்திக்க தாயார் ஆகி கொண்டுள்ளன. மேலும் இந்த கூட்டணியை வலுப்படுத்த வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணியினர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து தங்கள் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக, திமுகவுடன் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஜயகாந்தை கடந்த வாரம் சந்தித்தனர். பின்னர், எங்கள் கூட்டணியில் தான் விஜயகாந்த் தற்போது இருக்கிறார். இந்த கூட்டணி தொடரும் நல்லாட்சி அமைய ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த கூட்டணியில் அவர் நிச்சயம் நீடிப்பார் பாஜகவினர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 131 ஆவது ஆண்டு துவக்க விழா, கிறிஸ்துமஸ், மிலாது நபி பண்டிகை ஆகிய மூன்றையும் இணைத்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் மற்ற கட்சிகளை சந்தித்து ஆதரவு கோருவது வாடிக்கையான விஷயம் தான் என்றார்.
அப்போது மக்கள் நல கூட்டணியினர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தது குறித்த கேள்விக்கு, எங்களை பொறுத்த வரையில் தேமுதிக எங்களுடன் வந்தால் சந்தோஷம்தான் என்றார். மேலும், சட்ட சபை தேர்தல் கூட்டணி குறித்து பிப்ரவரிக்கு பின்னர் அறிவிக்கப்படும். கூட்டணிக்கு திமுக அழைக்கவில்லை என்பது பற்றி காங்கிரசுக்கு கவலை இல்லை என்று இளங்கோவன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment