Tuesday, 3 May 2016

பேராவூரணி தொகுதியில் அஇஅதிமுக வெற்றிபெற அதிக வாய்ப்பு :: தந்தி தொலைக்காட்சியின் "மக்கள் மனதில் யார்-2016" தேர்தல் கருத்துக்கணிப்பில் தகவல்.


தமிழகத்தின் முண்ணனி தொலைக்காட்சிகளில் ஒன்றான தந்தி டிவி "மக்கள் மனதில் யார்-2016" என்ற பிரம்மாண்ட தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தி கடந்த சில நாட்களாக மாவட்டவாரியாக ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு என ஒளிபரப்பப்பட்டுவருகிறது.
இந்தவரிசையில் பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியின் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது. இதன்படி,
அஇஅதிமுக வேட்பாளர் மா.கோவிந்தராசு 43% முதல் 48% ஆதரவு பெற்று முன்னிலையில் உள்ளார், இவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தை திமுக வேட்பாளர் நா.அசோக்குமார் 37% முதல் 43% வரையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தமயந்தி திருஞானம் 7% முதல் 13% வரை ஆதரவு பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். மேலும் பேராவூரணியில் போட்டியிடும் இதர வேட்பாளர்கள் 2% முதல் 8% வரை ஆதரவு பெற்றுள்ளதாக இந்த கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அஇஅதிமுக வேட்பாளர் மா.கோவிந்தராஜனுக்கு வெற்றிவாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், திமுக பல ஆண்டுகளுக்கு பின்னர் பேராவூரணியில் போட்டியிடுவதால் இத்தொகுதியில் கடும் போட்டி நிலவுவதாக இக்கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்புகள் தந்தி தொலைக்காட்சியில் இரவு 9.30 மணி முதல் ஒளிபரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment