இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதை எதிர்த்துப் பேசும் பாஜக வினர் தன்னுடைய ரெட்டை வேடத்தை அவ்வப்போது காட்டி விடுகின்றனர்.தற்போது இவர்கள் வசமாக மாட்டிக்கொண்டனர்.ஈரானில் சுஷ்மா சுவராஜ் முஸ்லிம் பெண்ணைப் போல் ஹிஜாப் அணிந்து தனது மானத்தை மறைத்து பாஜகவிற்கு அவமானத்தை அள்ளிக்கொடுத்துள்ளார்.
என்ன உடை இது?: ட்விட்டரில் சுஷ்மா ஸ்வராஜை விமர்சிக்கும் மக்கள்
டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஈரான் பயணித்தின்போது அணிந்திருந்த உடை பற்றி பலரும் ட்விட்டரில் விமர்சித்துள்ளனர். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இரண்டு நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை ஈரான் சென்றார். இந்நிலையில் அவர் ஈரான் பயணித்தின்போது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பலரும் ட்விட்டரில் அவரை விமர்சித்து வருகிறார்கள். காரணம் அவர் தலையில் முக்காடு போட்டு இருப்பதால். ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானியுடன் இருக்கும் புகைப்படத்தை சுஷ்மா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் சுஷ்மா தலையில் முக்காடு போட்டு இருக்கிறார்.
இவர்களை நினைத்தால் வடிவேலு சொல்வதுதான் ஞாபகத்திற்கு வருது.
இவர்களை நினைத்தால் வடிவேலு சொல்வதுதான் ஞாபகத்திற்கு வருது.
No comments:
Post a Comment