Saturday, 2 April 2016

சவுதி அரேபியா சென்றார் பிரதமர் நரேந்திர மோடி


அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றடைந்துள்ளார். பாதுகாப்பு, எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக உள்ளது. 
பிரதமர் மோடி பெல்ஜியம் பயணத்தை தொடர்ந்து அமெரிக்கா சென்று அங்கு நடைபெற்ற அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சவுதிஅரோபியாவிற்கு பிரதமர் சென்றடைந்துள்ளார். 
ரியாத் விமான நிலையத்திற்கு வந்தடைந்த மோடிக்கு அந்நாட்டு அரச குடும்பத்தினர் சார்பாகவும் சவுதி அரேபிய அரசு சார்பாகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துலாசிசின் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மோடிக்கு அங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை சவுதி மன்னர் மற்றும் அந்நாட்டு தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். 
அப்போது சவுதியில் வாழும் இந்தியர்களின் நலன், எரிபொருள் இறக்குமதி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment