Pages

Wednesday, 20 April 2016

உடல் ஆரோக்கியம் தரும் புதினா !!


நாம் அன்றாடம் பயன்படுத்தும் புதினா பல பயன்களை நமக்கு தருகிறது. புதினாவில் அதிக நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் என பலவேறு சத்துக்களும் உள்ளது.

பொதுவாக நம் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கக்கூடிய இயற்கை தாவரம். நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்யவும் உணவு செரிமானம் சம்பந்தமாக வரும் சூட்டையும் சுரத்தையும் நீக்கவல்லது. புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

புதினா கீரையை நீர் விடாமல் அரைத்து பற்றுப் போட்டால் தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலி குறையும். பல நேரங்களில் ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.

சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாவை குடிநீராக தயார் செய்து குடித்து வந்தால் எரிச்சல் தணியும். உடல் சூடு தணியும்.

No comments:

Post a Comment