ஹஜ் பெருநாள் பண்டிகையையொட்டி சிறைகளில் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு நாட்டினரில் 488 பேரை விடுதலை செய்யுமாறு துபாய் நாட்டின் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரக துணை ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் அஹமத் பின் ரஷித் அல் மக்தூம் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த பொது மன்னிப்பின் மூலம் விடுதலையாகும் கைதிகள் அனைவரும் நேர்மையான பாதையை இனி கடைபிடித்து, தங்களது குடும்பத்தாருடன் இணைந்து வாழ துபாய் ஆட்சியாளர் ஷேக் அஹமத் பின் ரஷித் அல் மக்தூம் விரும்புவதாகவும், குறிப்பாக ஹஜ் பெருநாள் பண்டிகையை அவர்களும் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என ஆசைப்படுவதாகவும் துபாய் அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த 488 கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment